• Title sponsor

தமிழன்னை - வே.வசந்தி தேவி

  • `நம் சமூகப் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வு கல்வியிலிருந்துதான் பிறக்க முடியும்’ என்ற முழக்கத்தையே வாழ்க்கையாகக் கொண்டிருப்பவர், வசந்தி தேவி. 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து கல்வித்தளத்திலும், சமுதாயத்திலும் மாற்றங்களுக்கு வித்திட்டு வரும் விருட்சம். 1980-களின் இறுதியில் உசிலம்பட்டி பெண் சிசுக்கொலைகளை, களத்துக்குச் சென்று தரவுகளோடு ஆவணப்படுத்தினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்த ராகப் பணியாற்றியபோது மாணவர்கள், ஆசிரி யர்கள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல தரப்பையும் ஒருங்கிணைத்து, பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது முதல் பல பணிகளை முன்னெடுத்தார். கற்றல் நலனுக்கான `பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்’தை தொடங்கி இன்று வரை களமாடி வருகிறார். பள்ளி மாணவர்களின் தற்கொலை அவலங்களைத் தடுக்க மிகுந்த அக்கறை காட்டுபவர். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியபோது பெண்கள் பாதுகாப்புக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உலகுக்கு கவனப்படுத்தினார். தற்போது தமிழக அரசு உருவாக்கியிருக்கும் பள்ளி மேலாண்மைக் குழு விலும் பங்களித்திருக்கிறார். உரையாடல்கள், கட்டுரைகள், புத்தகங்கள், செயல்பாடுகள் எனச் சமூக முன்னேற்றத்துக்கு ஓய்வறியாது பங்களித்து வரும் இந்த 85 வயது கலங்கரை விளக்கத்துக்கு... ’தமிழன்னை விருது’ வழங்கிப் போற்றி வணங்கு கிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here