• Title sponsor

ஸ்பெஷல் அச்சீவர் - நிகார் ஷாஜி

  • சூரியனை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் முதல் முயற்சியான ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்ந்தபோது, உலகமே ஆச்சர்யக் கண்களை இந்தியா மீது பதித்தது. அந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னிருந்த அழுத்தங்களைத் தாங்கி வெற்றியை வசப்படுத்தியவர், அதன் திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி. தேசத்தையும், தமிழ்நாட்டையும் தலை நிமிரச் செய்த செங்கோட்டை பெண். அரசுப் பள்ளி, அரசுக் கல்லூரிகளில் கற்று வந்த கற்பூரம். விவசாயக் குடும்பத்தில் இக்கட்டான பொருளாதார சூழலில் வளர்ந்தவர், பொறியியல் முடித்தபோது நாளிதழில் பார்த்த வேலை வாய்ப்பு செய்தி மூலம் இஸ்ரோ கதவை தட்டினார். திறந்தது பால்வெளி அவருக்கு. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தடமாக்கினார். மகள், மனைவி, அம்மா உள்ளிட்ட பொறுப்பு களை பூரணமாகப் பார்த்தபடியே, விஞ்ஞானி யாகத் தன் கரியரை செதுக்கினார். தன் 36 வருட பணி வாழ்க்கையில் கற்றலுக்கு மட்டும் விடுமுறை விடாமல் தொழில்நுட்பத்தில் தன்னை அப்டேட் செய்துகொண்டவருக்கு, பெரும் பொறுப்புகளை வழங்கி வளர்த்தெடுத்தது இஸ்ரோ. தமிழகத்தின் தென்கோடியில் இருந்தும், வாழ்வில் அடித்தட்டில் இருந்தும் முன்னேறி வானில் இந்தியாவின் பெயரை எழுதிய நிகார் ஷாஜிக்கு... `ஸ்பெஷல் அச்சீவர்’ விருது வழங்கி

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here