• Title sponsor

யூத் ஸ்டார் - ஐஸ்வர்யா லட்சுமி

  • `குந்தவையா... நந்தினியா?’ என்றிருந்த களம், `பொன்னியின் செல்வன்’ திரைப்பட டிரைலர் வந்தபோது ‘பூங்குழலி’யை நோக்கித் திரும்பியது. தமிழ் ரசிகர்களையும், மலையாள ரசிகர்களையும் அடிக்கடி தன்னை திரும்பிப் பார்க்க வைக்கும் படங்களைக் கொடுத்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி... ஒரு மருத்துவர். எம்.பி.பி.எஸ் படித்தபோதே மாடலிங் செய்யத் தொடங்கியவர், 2017-ல் மல்லுவுட்டில் அறிமுக மானார். முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் பல பாராட்டுகளையும், விருதுகளையும் தட்டித் தூக்கினார். தொடர்ந்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் `கார்கி’, `பொன்னியின் செல்வன்’, ‘ஜெகமே தந்திரம்’, `கட்டா குஸ்தி’ என... தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் ஆனார். ‘கார்கி’ படம், அதன் தயாரிப்பாளராகவும் அவரை வாகை சூட வைத்தது. காதல், த்ரில்லர், பீரியட் ஃபிலிம், உமன் எம்பவர்மென்ட் படம் எல்லா ஜானர் படங்களிலும், திரையில் தனக்கான ஸ்பேஸுடன் தடம் பதித்து வருவது ஐஸ்வர்யா லட்சுமியின் ஸ்பெஷல். சினிமா முதல் ரிலேஷன்ஷிப் கேள்விகள் வரை... நேர்காணல்களில் இவரது நேருக்கு நேரான பேச்சுக்கும் பதில்களுக்கும் வந்து குவிகின்றன ஆர்டின்கள். வசீகரத்துடன் துணிவும் தெளிவும் ஒருங்கிணையப்பெற்ற இந்த டாக்டர், ஆக்டர், தயாரிப்பாளர் திறமையாளருக்கு... `யூத் ஸ்டார்’ விருது வழங்கி அழகுபார்க்கிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here