• Title sponsor

எவர்கிரீன் நாயகி - நதியா

  • எவர்கிரீன் என்ற வார்த்தைக்கு இவரை விட பொருத்தமானவரைச் சொல்ல முடியுமா என்ன?! கோலிவுட்டின் ஸ்டைல் ஐகான் என்ற நிரந்தர பட்டத்துக்குச் சொந்தக்காரர் நதியா. 80-களில் அறிமுகமான இவரது அழகும், நடிப்பும் இன்றுவரை ஜொலித்துக்கொண்டே இருக்கின்றன. முதல் படத்திலிருந்தே மக்கள் இவரை தங்கள் இதயத்தேரில் ஏற்றிக் கொண்டார்கள். நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா டிரஸ் என ஃபேஷன் உலகத்தையும் ரசிகர்களையும் இணைத்த நட்சத்திரம். முன்னணி ஹீரோக்களுடன் மிடுக்கான ஹீரோயினாக நடித்து ஈர்த்தவர், கேரக்டர் ரோல்களிலும் மிளிர்ந்தார். புகழின் உச்சியில் இருந்தபோதே சினிமாவுக்கு `பை’ சொல்லிவிட்டு மணவாழ்க்கையில் செட்டில் ஆனபோது, `மிஸ் யூ’ என்று கதறினார்கள் ரசிகர்கள். 16 வருடங்கள் கழித்து குமரனின் அம்மா மஹாலட்சுமியாக இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தவர், அதுவரை அம்மா கேரக்டர்கள் என்றாலே முதுமை, டல்லான டிரஸ்ஸிங், சோகம் என்றிருந்த கிளிஷேக்களையெல்லாம் உடைத்து நொறுக்கி `வாவ்’ சொல்லவைத்தார். 80-ஸ் கிட்ஸ் கொண்டாடிய நதியாவை, 2கே கிட்ஸும் ரசிக்கிறார்கள். ஏறக்குறைய 40 வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் தன் ஸ்டைலிஷான நடிப்பால் தடம்பதித்து வரும் நதியாவை... `எவர்கிரீன் நாயகி’ விருது வழங்கி கொண்டாடுகிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here