• Title sponsor

கலை நாயகி - முத்துக்கண்ணம்மாள்

  • நாட்டியக் கலையின் முன்னோடியாகக் கருதப்படும் சதிராட்டக் கலையின் கடைசி வாரிசு, முத்துக்கண்ணம்மாள். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இவரது பூர்வீகம். ஏழு வயதிலேயே சதிராட ஆரம்பித்தவர். ராஜாக்கள் காலத்தில் தினமும் கோயிலில் காலை, மாலை என இருவேளைகளில் 200 படிகள் ஏறி, முருகனை வணங்கிப் பாடி, ஆடி வந்தார். மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்தபிறகு, கோயில்களில் சதிராட்டம் ஆடவும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இவருடன் புதுக் கோட்டை சமஸ்தானத்தில் சதிராட்டம் ஆடி வந்த 31 பெண்கள் அதன்பிறகு விவசாயம் உள்ளிட்ட மாற்றுவேலைகளுக்குச் சென்றனர். சதிராட்டத்தில் மனதார கரைந்திருந்த முத்துக் கண்ணம்மாள், அதை கைவிட மனமின்றி, கற்றுக்கொள்ள விரும்பிய பலருக்கும் பயிற்று வித்து வருகிறார், இந்த 84 வயது வரை. மத்திய அரசின் பத்ம விருது பெற்றிருப் பவருக்கு, தமிழக அரசு கலைஞர்களுக்காக வழங்கும் ரூ. 3,000 உதவித்தொகை மட்டுமே வருமானம். ஆனாலும், இந்த வயோதிகத்திலும், தான் கற்ற கலை அதன் கடைசி பிரதியான தன்னோடு அழிந்துவிடக்கூடாது எனப் பிரயத் தனப்படும் முத்துக்கண்ணம்மாளுக்கு... `கலை நாயகி’ விருது வழங்கி வணங்குகிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here