• Title sponsor

பெஸ்ட் மாம் - அழகு பரத்வாஜ்

  • சாய் சுதர்சன், கிரிக்கெட் உலகின் இளம் சென்சேஷன். 21 வயதாகும் இந்தப் புயல் பேட்ஸ்மேன் மைதானங்களை அதிரவைக்கும் மேட்ச்களில் எல்லாம் பார்வையாளர்கள் வரிசையில் ஈன்ற பொழுதின் பெரிதுவக்க அமர்ந்திருக்கிறார், அவரின் அம்மா உஷா என்கிற அழகு பரத்வாஜ். இந்தத் தாய் எட்டடி பாய்ந்ததன் விளைவுதான், சாய் சுதர்சனின் பதினாறடிப் பாய்ச்சல். ஃபிட்னெஸ் பயிற்சி யளிக்கும் "ஸ்ட்ரெங்த் அண்ட் கண்டிஷனிங் கோச்"சான (Strength and Conditioning Coach) உஷா, தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் அணியினர், நம்பர் ஒன் விளையாட்டு வீரர்கள், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எனப் பலருக்கும் கோச். சாய் சுதர்சனுக்கு முன்னரே விளையாட்டு உலகில் பிரபலமானவர். வாலிபால் பிளேயரான உஷா வுக்கு, அதில் இந்திய அளவில் சாதிக்கும் கனவு, கனவாகவே போனது. இளைய மகன் சாய் சுதர்சனுக்கு கிரிக்கெட்டில் ஆர்வமிருப் பதைக் கண்டுபிடித்தவர், மகனின் கனவையே தனதாக்கிக் கொண்டார். நனவாகியிருக்கும் அந்தக் கனவு இன்று ரன்களையும் ரசிகர்களை யும் குவித்துக்கொண்டிருக்கிறது. படிப்புதான் வாழ்க்கை எனப் பிள்ளைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பெரும்பான்மை பெற்றோருக்கு மத்தியில், விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னுதாரணமாகி இருக்கும் உஷாவுக்கு... "பெஸ்ட் மாம்" விருது அளித்து உவகை கொள்கிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here