• Title sponsor

சேவை தேவதை - மனீஷா கிருஷ்ணசாமி

  • பெற்றோர்களையே சிலர் ஆதரவற்றவர்களாக தனித்துவிடும் காலத்தில், ஆதரவற்றவர்களை தன் பெற்றோர்களாக அரவணைத்துக் கொள்கிறார் மனீஷா கிருஷ்ணசாமி. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியரான இவர், 2017-ம் ஆண்டு முதல், தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றவர் களை மீட்டு, சுத்தப்படுத்தி, சிகிச்சையளித்து நண்பர்கள் மற்றும் காவல் துறை உதவியுடன் அரசு காப்பகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் காப்பகங்களில் சேர்த்து வருகிறார். கொரோனா காலத்தில் காய்ந்த வயிறுகளுடன் தவித்த 90-க்கும் மேற்பட்டவர் களை மீட்டு, ஈரோடு மாநகராட்சி ஆணையரின் அனுமதி பெற்று, ஓர் அரசுப்பள்ளியில் தங்க வைத்தார். அவர்களில் உடல், மன ஆரோக் கியத்துடன் இருந்தவர்களுக்குக் கைத்தொழில் களைக் கற்றுக்கொடுத்து வேலை வாய்ப்பு களை உருவாக்கிக் கொடுத்தார். தன் சம்பளத் துடன், இரவு நேரங்களில் லோடு இறக்கும் வேலை செய்வது, கறிக்கடையில் பகுதி நேர வேலை பார்ப்பது எனப் பணம் ஈட்டியும், நல்லுள்ளங்களிடம் உதவிபெற்றும் கைவிடப் பட்டவர்களை கவனித்துக் கொண்டவர், தற்போது மேற்படிப்பு படிக்கிறார் இப்பணி களையும் ஒருங்கிணைத்தபடி. இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஆதரவற்றவர்களை தன் குடும்பமாக இணைத்துக்கொண்டிருக்கும் மனீஷாவுக்கு... "சேவை தேவதை" விருது வழங்கி மகிழ்ச்சிகொள்கிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here