• Title sponsor

வைரல் ஸ்டார் - ஶ்ரீமதி சீமு

  • சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான ஶ்ரீமதி சீமுவின் வீடியோ களம், ஹியூமர். குழந்தையாக இருந்தபோது `பூ’ திரைப் படத்தின் `சூச்சூ மாரி’ பாடலைப் பாடி நமக்குச் செல்லக் குரலாக அறிமுகமானவர், தொடர்ந்து சில திரைப்படங்களில் பின்னணி பாடினார். டிகிரி முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இந்த சென்னைப் பெண், கொரோனா லாக்டௌன் காலத்தில் இன்ஃப்ளூயன்சர் அவதாரம் எடுத்தார். ரியல் லைஃப் காமெடிகளை பல கெட்அப்களில் தோன்றி இவர் வெளியிட்ட வீடியோக்கள் செம ஹிட். தங்கச்சி சோதனைகள், சீரியல் Vs ரியாலிட்டி, பீரியட்ஸ் பேசினால், அடுப்பில் வைத்த பால் பேசினால்... இப்படியான இவரது காமெடி கான்செப்ட் வீடியோக்கள் பல மில்லியன் வியூவ்ஸை தாண்டுகின்றன. ஜி.வி.பிரகாஷ், ஹரிஷ் கல்யாண், பிரதீப் ரங்கநாதன், முகின் ராவ் என ஸ்டார்ஸுடன் இவர் செய்த ரீஸ்ல், 2K கிட்ஸிடம் ஹிட். 90’s கிட்ஸ், 80’s கிட்ஸ்களையும் தனது வீடியோக் களுடன் தங்களைப் பொருத்திப் பார்த்துச் சிரிக்கவைப்பவருக்கு... `வைரல் ஸ்டார்’ விருது வழங்கி வாழ்த்துகிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here