• Title sponsor

வெற்றிப்படை - `அமிர்தம் தாய்ப்பால் தானம்’ குழு

  • பல சூழல்களால் தாய்ப்பால் கிடைக்காத பச்சிளம் குழந்தைகளின் பிஞ்சு வயிறுகளின் பசியை அறிந்தவர்களுக்குத் தெரியும்... தாய்ப்பால் தானத்தின் முக்கியத்துவம். அதை உணர்ந்து, 2017-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது `அமிர்தம் தாய்ப்பால் தானம்’ குழு. அவிநாசியைச் சேர்ந்ந ரூபா செல்வநாயகி, இதன் தொடக்கப்புள்ளி. இவருக்குக் குழந்தை பிறந்தபோது கோவை, அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கியில் தானம் செய்தவர், அதையே சேவையாகத் தொடர தன்னார்வலராகக் களமிறங்கினார். பெண்கள் பலரும் அதே அக்கறையுடனும் விழிப்புணர்வுடனும் கைகோத்தனர்... `அமிர்தம் தாய்ப்பால் தானம்’ குழுவாக ஒருங்கிணைந்தனர். இன்று இந்தச் சேவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவடைந் துள்ளது. மேலும் புதுச்சேரி, கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் இக்குழுவின் ஒருங்கிணைப்பால் பலர் தாய்ப்பால் தானம் செய்கின்றனர். ஒவ்வொரு மாதமும் மாநிலம் முழுக்க சராசரியாக 300-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் என ஆண்டுக்கு 2,000 லிட்டர் வரை அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் தானம் செய்கிறார்கள். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிசுக்கள் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என்ற அரும்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திருக்கும் `அமிர்தம் தாய்ப்பால் தானம்’ குழுவை வாழ்த்தி ஊக்குவிக்கிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here