• Title sponsor

சிங்கப்பெண் - முத்தமிழ்செல்வி

  • எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையைச் சொந்தமாக்கியிருப்பவர், முத்தமிழ்செல்வி. திருமணத்துக்குப் பிறகு பட்டப்படிப்பை முடித்து தன் சிக்ஸர்களை தொடங்கியிருக்கிறார் இந்த சென்னை பெண். மலை ஏறுவதில் ஆர்வம்கொண்டு இவர் பயிற்சிகள் செய்தபோது விமர்சனங்களும், கேலிகளும் சூழ்ந்தன. அவற்றுக்கெல்லாம் தன் வெற்றி மூலமே பதில் சொல்ல வேண்டும் என்று வைராக்கியம் பூண்டார். முதல் முயற்சி யாக, கண்களைக் கட்டிக்கொண்டு 155 அடி உயரம் கொண்ட மலையில் இருந்து கீழே இறங்கினார். அந்தத் திகைப்பு அடங்குவதற் குள், தன் மகளுடன் 165 அடி உயரம் கொண்ட மலையில் இருந்து கண்களைக் கட்டிக் கொண்டு கீழே இறங்கினார். தன் ஒவ்வொரு சாதனையையும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்கான எதிர்ப்பாகப் பதிவு செய்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியபோது, அந்த உறை குளிரில் உடல்நலக் குறைவு, ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என உயிர் பறிக்குமளவுக்குத் தன்னை பயமுறுத்திய சவால்களை எல்லாம் கடந்தார். 34 வயதில், இரண்டு குழந்தைகளின் அம்மாவாக, எவரெஸ்ட் சாதனை சூடியிருக்கும் முத்தமிழ் செல்விக்கு... `சிங்கப்பெண்’ விருது வழங்கி மகிழ்வை பகிர்கிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here