• Title sponsor

தர்ம தேவதை - ஆயி என்ற பூரணம்

  • ’வலக்கை கொடுப்பது இடக்கைக்குத் தெரியக்கூடாது’ என்ற அறமொழியின் மனித உருவம்... ஆயி பூரணம் அம்மாள். ஏழரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள தன் நிலத்தை ஒருவரும் அறியாமல் அரசுப் பள்ளிக்கு ஆவணப்பதிவு செய்துகொடுத்த அபூர்வ மனுஷி. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு இதுபற்றி தெரியவர, அவர் நேரில் சென்று பாராட்டியபோதுதான் ஊருக்கே தெரிந்தது. உலகமே வியந்தது. மகள் ஜனனி பிறந்து ஒன்றரை வருடங்களில் தன் கணவரை இழந்தார் பூரணம் அம்மாள். இடிந்துபோனவர், இனி மகள்தான் உலகமென்று வாழத் தொடங்கினார். நிலபுலன்கள் அதிகமுள்ள குடும்பம் என்றாலும், கணவர் வேலைபார்த்த கனரா வங்கியில் கருணை அடிப்படையில் கிடைத்த கிளார்க் வேலையில் சேர்ந்தார். உணவு முதல் கல்வி வரை பூரணம் அம்மாளும், மகள் ஜனனியும் பிறருக்கு உதவுவதில் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். ஆனால் விதி, இளவயதிலேயே மகளின் உயிரையும் எடுத்துக்கொண்டது. ஆறித்தேற முடியாத ரணத்துடனேதான், ஜனனியின் நினைவாகவும், அவரது ஈகை குணத்தின் நீட்சியாகவும் யா.கொடிக்குளம் அரசுப் பள்ளிக்கு ஏழரை கோடி மதிப்புள்ள நிலத்தை அளித்துள்ளார் பூரணம் அம்மாள்.

    இழப்பும், துயரும், உழைப்பும், பாசமும், கொடையுமாக நிற்கும் இந்தத் தாய்க்கு, 'தர்ம தேவதை' விருது வழங்கி நன்றி நவில்கிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here