ரெட்ரோ சினிமாக்களின் இளவரசி, ரேவதி. துள்ளல், காதல், சோகம், காமெடி என எல்லா ஜானர்களிலும் கொடிநாட்டியவர். பாரதிராஜா, மகேந்திரன், பாலசந்தர், மணி ரத்னம், பாலு மகேந்திரா என வெவ்வேறு கள சினிமா இயக்குநர்களுக்கும் ‘மோஸ்ட் வான்டட் ஹீரோயின்’. ’மௌன ராகம்’ திவ்யா கேரக்டர்... இன்று வரை தமிழ் சினிமாவின் OG. 'கை கொடுக்கும் கை', ’வைதேகி காத்திருந்தாள்', 'அரங்கேற்ற வேளை', 'புதுமைப் பெண்', 'அஞ்சலி', 'மறுபடியும்', ‘பவர் பாண்டி’ என.. ஒவ்வொரு படத்திலும் இவர் காட்டிய பரிமாணங்கள், சினிமா பல்கலைக்கழகப் பாடங்கள். ரேவதியின் கிரேஸ்ஃபுல்லான டான்ஸுக்கு, தனி ஃபேன்பேஸ் உண்டு. சிவாஜி, ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, சல்மான் கான் என இந்திய சினிமாவின் உச்ச நடிகர்களுடன் இணைந்து இவர் அடித்ததெல்லாம் சிக்ஸர்கள். இயக்குநராகவும் தடம் பதித்து,150-க்கும் மேற்பட்ட படங்களுடன் இன்றுவரை ரசிக்கவைத்துக் கொண்டிருக்கும் ரேவதிக்கு, 'எவர்கிரீன் நாயகி' விருது வழங்கி பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்!