தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி... சினேகா. 'என்னவளே' படத்தில் அறிமுகமானவர், 'ஆனந்தம்' படத்திற்குப் பின் தமிழ்நாட்டின் சென்சேஷன் ஆனார். துறுதுறு நடிப்பும், ஈர்க்கும் சிரிப்பும் இவரை 90'ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ஹீரோயினாக்கின. ஹோம்லி இமேஜ், தமிழ்க் குடும்பங்களுக்குள்ளும் இவரை கொண்டுசேர்த்தது. டாப் ஸ்டார்களுடன் நடித்து இவர் கொடுத்த தொடர் ஹிட்கள், முன்னணி ஹீரோயின் மகுடத்தை அவருக்குச் சூட்டின. சிறப்பான காதாபாத்திர தேர்வு, பன்முக நடிப்பாற்றல், நேர்த்தியான உடைகள் என தமிழ் சினிமாவுக்கு ஒரு டிரெண்ட் செட்டரானார் சினேகா. அது, தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளத்திலும் இவருக்கு வசப்படுத்தின வெற்றிகளை. 'கோட்' திரைப்படத்தில் விஜய் ஜோடியாக, Gen Z ரசிகர்களையும் 'வாவ்' சொல்ல வைத்தது இந்த வசீகரம். கால் நூற்றாண்டாகத் தமிழ் சினிமாவின் மோஸ்ட் கிரேஸ்ஃபுல் தீவா (Diva) ஆக மிளிர்ந்துகொண்டிருக்கும் சினேகாவுக்கு, 'அவள் ஐகான்' விருதளித்து ஆனந்தம் கொள்கிறது அவள் விகடன்.