• Title sponsor

  • Co-Presented By

சாகச மங்கை - தீபா

  • விமானப் போக்குவரத்துத் துறையில் சர்வதேச வானில் மின்னும் தமிழக நட்சத்திரம், பைலட் தீபா. விமானியாகப் பயணத்தை தொடங்கியவர். இப்போது, விமானத்தை இயக்குவதற்கான பயிற்சிகளை அளிக்கும் 'இன்ஸ்ட்ரக்டர்' எனும் உயர் பொறுப்பு அவர் கைகளில். இந்திய அளவில் மிகச் சிலரே எட்டும் இந்த உயரத்தில் வீற்றிருக்கும் ஒரே தமிழ்ப் பெண், தீபா. பல்லாயிரக்கணக்கான பயிற்சி விமானிகள், செக் பைலட்களுக்கு உள்நாடு, வெளிநாடு விமானப் பயிற்சிகள் அளித்து வரும் துரோணர். கூடவே, ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த விமானியாகவும் பறந்துகொண்டிருக்கிறார். 25 ஆண்டுக்கால பணி அனுபவத்தில் 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கியிருக்கும் சூப்பர் சீனியர். உலகளவில் தொழில்நுட்ப ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த விமானங்கள் பல, இவர் விரலசைவில் மிதக்கின்றன. இத்துறையில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு முன்மாதிரியாக வானில் வட்டமடிக்கும் இந்த வெண் பறவைக்கு, 'சாகச மங்கை' விருதளித்துப் பாராட்டுகிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here