இந்தியாவில் ஹெச்.ஐ.வி பாதிப்பு கண்டறியப்பட்ட முதல் திருநங்கை, நூரி. ஆனால், துவண்டு போகாமல் ஹெச்.ஐ.வி ஒழிப்புப் போராளியாக இயங்கத் தொடங்கினார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட 'எஸ்.ஐ.பி' அமைப்பு, பல பெண்களை பாலியல் தொழிலில் இருந்து மீட்டு, வாழ்வாதார வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறது. ஹெச்.ஐ.வி பாதித்த பெற்றோர்களின் குழந்தைகளை, உதவிகள் பெற்று காப்பகத்தில் வளர்த்து வருகிறார். அப்படி இவரால் அரவணைக்கப்பட்ட 69 பெண் குழந்தைகளும், 16 ஆண் குழந்தைகளும் கல்வியுடன் வாழ்க்கையில் கரைசேர்ந்துள்ளனர். தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹெச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு மீட்பர் ஆகியுள்ளார் நூரி. அவர்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, வேலைவாய்ப்பு வழிகாட்டல், வாழ்க்கைக்கான ஆலோசனை என ஏற்படுத்திக் கொடுத்துள்ளது இந்த ஆலமரம்.
39 வருடங்களாக இந்தச் சேவைகளில் இயங்கிவரும், 76 வயதிலும் ஓய்வறியாது ஓடிக்கொண்டே இருக்கும் நூரிக்கு, ’சேவை தேவதை’ விருது வழங்கி கெளரவிக்கிறது அவள் விகடன்!