• Title sponsor

  • Co-Presented By

ரைஸிங் ஸ்டார் - துஷாரா விஜயன்

  • கோலிவுட்டின் அசத்தல் தமிழ் முகம், துஷாரா விஜயன். திண்டுக்கல் பெண், இன்று தமிழ் சினிமாவில் தனக்கென உருவாக்கியுள்ளார் ஓர் அழுத்தமான இடம். மாடலிங்கில் தன் கரியரை ஆரம்பித்தவருக்கு, 2019-ல் அறிமுகம் கொடுத்தது `போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படம். ‘சார்பட்டா பரம்பரை’ மாரியம்மா கதாபாத்திரத்தில், ‘அட, யார் இந்தப் பொண்ணு?’ எனத் திரும்பிப் பார்க்க வைத்தார். `நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ரெனே கதாபாத்திரத்தில் நவீன காதல், சமூக அரசியல் எனப் பல பரிமாணங்கள் தாங்கினார் துஷாரா. தொடர்ந்து, `கழுவேத்தி மூர்க்கனி’ல் ஊர்க்காரப் பொண்ணு, `ராயனி’ல் பாசக்கார தங்கச்சி, ‘வேட்டையனி’ல் அக்கறையுள்ள டீச்சர் எனப் படத்திற்குப் படம் நடிப்பில் இவர் முதிர்ச்சி கூடிக் கொண்டே போனது. `வீர தீர சூரனி’ல் அதட்டிய கலைவாணியோ, இன்னும் அதகளம். நடிப்பில் வேட்கை கொண்டுள்ள புதிய முகங்களுக்கான இடம், தமிழ் சினிமாவில் எப்போதும் உண்டு என்பதை தற்போது நிரூபித் திருக்கும் துஷாராவுக்கு, ‘ரைஸிங் ஸ்டார்’ விருது வழங்கிப் பாராட்டுகிறது அவள் விகடன்!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here