• Title sponsor


கலைநாயகி - கே.எஸ்.சித்ரா

  • தென்றலின் மென்மையையும் விடியலின் நம்பிக்கையையும் தன் தேன்சிந்தும் குரலில் குழைத்து, நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தென்னிந்திய இசை உலகை ஆளும் 'சின்னக்குயில்' கே.எஸ். சித்ரா. அசாத்திய சுருதி சுத்தத்தாலும் வசீகரக் குரலாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி எனப் பல மொழிகளில், பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி இந்திய இசை வரலாற்றில் முத்திரை பதித்த இசைக் காவியம். காதலின் மென்மையோ, தாய்மையின் வாஞ்சையோ, பிரிவின் வலியோ... எந்த உணர்வாக இருந்தாலும், தன் பாவத்தால் பாடல்களுக்கு உயிரூட்டும் தேன்குரலி. ஆறு தேசிய விருதுகள், பத்ம பூஷண் எனப் பல உயரிய கௌரவங்களைப் பெற்றாலும், தன் குழந்தைத்தனமான புன்னகையாலும் எளிமையாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர். வாழ்வின் புயல்களையும் சோதனைகளையும் தன் தெய்வீகச் சிரிப்பாலும் தளராத இசை பக்தியாலும் வென்று மீண்டவர். மொழிகள் கடந்து, நம்மை அறியாமல் வாழ்வின் அத்தனை கணங்களையும் அழகாக்கிய இசைப் பேரரசி `சின்னக்குயில்' சித்ராவுக்கு, `கலைநாயகி' விருதளிப்பதில் பேருவகை கொள்கிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here