ஒரு தாயின் தாலாட்டு என்பது வெறும் இசையல்ல... அது ஒரு தலைவனை உருவாக்கும் மந்திரம். கர்னாடக இசைக் கலைஞர், திரையிசைப் பாடகி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையால் தனக்கெனத் தனி அடையாளத்தைப் பதித்தவர் ஷோபா சந்திரசேகர். ஒருகட்டத்தில் தன் சொந்தக் கனவு களைத் தள்ளிவைத்துவிட்டு மகனின் லட்சியத்துக்காகவே தன் வாழ்வைத் தகவமைத்துக் கொண்டார். திரையுலகில் கால்பதித்த இளம் நடிகர் விஜய்க்கு முதல் ஊக்கசக்தியாக இருந்தது தொடங்கி, இன்று மக்கள் தலைவராக, தமிழக முதலமைச்சராக மகுடம் சூடிய பயணம் வரை, அவரின் அத்தனை வெற்றிகளின் பின்னணியிலும் அரணாக நிற்பவர்.
தடைகள் பல கடந்து மகனை மாற்றுக்குறையாமல் அரவணைத்து, வழி நடத்தியதில் இந்த அன்னைக்குப் பெரும் பங்குண்டு. எந்தப் பெரும் புயலும் அசைத்துப் பார்த்திடாத அன்பு ஆலமரம், அர்ப்பணிப்பின் உறைவிடம் ஷோபாவுக்கு, `Best Mom' விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது அவள் விகடன்.