• Title sponsor


Extraordinary Performer - நித்யா மெனென்

  • `நடிப்பு ராட்சசி' என மக்களின் மனமுவந்த பாராட்டு, தேசிய விருது அங்கீகாரம் எனத் திரையுலகின் `லக்கி சார்ம்' நித்யா மெனென். திரையில் தோன்றினாலே தன் காந்தக் கண்களாலும், யதார்த்த நடிப்பாலும் நம்மைக் கட்டிப்போடும் மாயாஜாலக்காரி. பிரமாண்ட நட்சத்திரப் பட்டாளங்களுக்கு நடுவிலும், தன் தனித்துவமான முத்திரையால் கதையின் ஒட்டுமொத்த ஆன்மாவாக மாறுபவர். தன் அசாத்திய திறமையால் ஹீரோக்கள் ஆதிக்கம் செலுத்தும் படமென்றாலும், திரை இருப்பால் ஈர்க்கும் வசியக்காரி. `ஓ காதல் கண்மணி' தாராவாக நவீன காதலுக்கு உயிர் கொடுத்து, `திருச்சிற்றம்பலம்' ஷோபனாவாகத் தேசிய விருது வென்று நம் வீட்டுப் பெண்ணாகவே மாறிப்போனவர். நடிப்பு மட்டுமன்றி, தேன்குரல் பாடகியாகவும், தயாரிப்பாளராகவும் தன் பன்முகத் திறமையால் மொழிகள் கடந்து கொண்டாடப்படுபவர். நடிப்பை வெறும் தொழிலாகக் கருதாமல், கலையின் உச்சம் தொடும் தவமாக வாழும் இந்த அற்புதக் கலைஞருக்கு `Extraordinary Performer' விருது வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here