• Title sponsor


எவர்கிரீன் நாயகி - நடிகை ரோஜா

  • அழகு, அர்ப்பணிப்பு, ஆளுமை, நடிப்பு எனத் தொண்ணூறுகளில் திரையுலகை ஆண்ட கனவு தேவதை ரோஜா. `செம்பருத்தி'யாய் அறிமுகமாகி, காதல், காமெடி, அதிரடி என அத்தனை பரிமாணங் களிலும் அதகளம் செய்தவர். வெள்ளித்திரை தவிர்த்து, சின்னத்திரையில் கலகலப்பான தொகுப் பாளினியாகவும் நடுவராகவும் வீடுதோறும் வலம் வந்து நம் குடும்பத்தில் ஒருவராகவே மாறிப்போனார். விஜய், பிரபுதேவாவுடன் போட்டிபோட்டு இவர் ஆடிய துள்ளலான டான்ஸ், இன்றைய டிஜிட்டல் யுகத்திலும் வைரல் ஹிட். கலையுலகின் உச்சம் தொட்டதோடு நில்லாமல், மக்கள் பணியிலும் தன்னை அர்ப்பணித்து, அமைச்சராகி ஆந்திர அரசியலிலும் முத்திரை பதித்த ஆளுமை. இப்போது அடுத்தடுத்த நடிப்பு இன்னிங்ஸிலும் வெறித்தனம் காட்டும் வாடாத இந்த அழகிய ரோஜாவுக்கு `எவர்கிரீன் நாயகி' விருதளித்து மெச்சுகிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here