• Title sponsor


Special Mention - தமிழ் மரபுக்கலை திலகவதி பழனி

  • கல்வி முதல் கலை வரை பாலினத் தடைகளைத் தகர்ப்பதே இன்றைக்கும் பல பெண்களின் வாழ்நாள் போராட்டம். நீண்ட நெடுங்காலமாக ஆண்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கட்டைக்கூத்துக் கலையில், தன் பதினொன்றாம் வயதில் தனித்து தெரிந்து உரிமைக்குரல் எழுப்பிச் சரித்திரம் படைத்தவர் ராணிப்பேட்டை திலகவதி பழனி. தந்தையின் ஆதரவுடன் குரு போ.ராஜகோபாலிடம் பத்தாண்டுகள் பயிற்சி பெற்று, ‘கட்டைக்கூத்துக் கலையின் முதல் பெண் கலைஞர்’ எனும் பெருமையைப் பெற்றவர். சாதனையாளரின் மகுடத்தில் மேலும் ஒரு வைரமாய் வந்து சேர்ந்தது தேசிய விருது. ‘திலகம்’ பயிற்சிப் பள்ளி நடத்துவதுடன் கே.வேளூர் அரசுப் பள்ளியில் கூத்து பயிற்றுவித்து அடுத்த தலைமுறையை வார்க்கும் கலைப் போராளியாகவும் திகழ்கிறார் இந்தக் கலை ஆசான். கட்டைக்கூத்தில் வழக்கமாகச் சித்திரிக்கப்படும் ராமாயண, மகாபாரதக் கதைகளைத் தாண்டி பாலின சமத்துவம், குடும்ப வன்முறை, பருவநிலை மாற்றம் என சமகாலப் பிரச்னைகளையும் மேடைகளில் தெறிக்கவிடுவது இவரின் ஸ்பெஷாலிட்டி. பல தடைகள் கடந்து தலை நிமிர்ந்து நடைபோடும் திலகவதி பழனியின் மரபுக்கலைப் பங்களிப்பைப் பாராட்டி சிறப்பு விருதளித்துப் பெருமைகொள்கிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here