• Title sponsor


சேவை தேவதை - விஜயா பாஸ்கரன்

  • செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் உலகத்துக்கும் மற்றவர்களுக்குமான ஒரே உயிர்ப் பாலம் சைகைமொழிதான். கடினமான அந்த மொழியை அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் வாழ்வின் அங்கமாகக் கொண்டு இயங்கி வருபவர் விஜயா பாஸ்கரன். உடன்பிறந்த மூவரும் செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் என்பதால், சிறு வயதிலேயே கைகூடிய சைகை மொழியில், பன்னிரண்டு வயதிலேயே நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரானவர். இன்றும் நீதிமன்றம், காவல் நிலையம், கல்லூரிகள் என எங்கும் அவரின் தன்னலமற்ற சேவைப்பயணம் தொடர்கிறது. அதோடு நில்லாமல் செவித்திறன் மாற்றுத்திறனாளி களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவது, நிறுவனங்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி அளிப்பது என பல தளங்களிலும் இயங்கிவருகிறார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்காக 1330 திருக்குறள்களையும் சைகை மொழியில் மொழிபெயர்த்த பெரும் உழைப்பு இவருடையது. கேட்க, பேச முடியாதவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் உலகுக்குக் கொண்டு சேர்க்கும் இவருக்கு, `சேவை தேவதை' விருது வழங்கி கொண்டாடுகிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here