• Title sponsor


இலக்கிய ஆளுமை - தமயந்தி

  • நிறையவும் நிறைவாகவும் எழுதி இருக்கிறார் தமயந்தி. தன் படைப்புகள் வழி பெண்களின் நிலையை கனிவாகவும் பொருள்படவும் பேசிவரும் இந்த எழுத்துப் போராளி, நிறைய இளம் தலைமுறைப் படைப்பாளிகளுக்கு உத்வேகமாகவும் இருக்கிறார். மனிதர்கள் மீதான ஆழ்ந்த வாஞ்சையும் நம்பிக்கையும் அவரின் எல்லா கதைகளிலும் ஒளிந்திருக்கிறது. எந்தக் குழுவிலும் சேராமல் யார் அணியிலும் இடம் பெறாமல் தனித்து வெளிப்படுபவர். பாலியல் அத்து மீறல்கள், திருமண முறிவு உள்ளிட்ட விஷயங்களால் மூன்று முறை மரணத்தின் விளிம்பு வரை சென்ற போதும், சில்வியா பிளாத்தின் கவிதை மொழி பெயர்ப்புகள் மற்றும் பயணங்கள் வழியாக வாழ்வை வென்றெடுத்த வைராக்கிய மனுஷி இவர். உடல் அரசியலையும், சமூகக் கட்டமைப்புகளையும் கேள்விக்குட்படுத்தியதால் பல எதிர்ப்புகளைச் சந்தித்த தமயந்தி, பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி ‘தடயம்’, ‘காயல்’ படங்கள் மூலம் இயக்குநராகவும் அவதாரமெடுத்தார். ‘என் வானத்தை என் கண்களால் மட்டுமே பார்ப்பேன்’ என பிடிவாதமாய் இருந்து இலக்கியத் துக்குப் பங்களித்து வரும் தமயந்திக்கு, `இலக்கிய ஆளுமை' விருது அளித்து மகிழ்கிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here