• Title sponsor


சிங்கப்பெண் - பரணிகா இளங்கோவன்

  • 75 ஆண்டுக்கால ஆசிய விளையாட்டு வரலாற்றில், போல் வால்ட் பிரிவில் இந்தியாவுக் கான முதல் பதக்கத்தை வென்று வானுயரம் பறந்து புதிய சரித்திரம் எழுதியிருக்கிறார் பரணிகா இளங்கோவன். மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரத்தின் விவசாயக் குடும்பத்தில் பிறந்து, பதிமூன்று வயதில் விளையாட்டுப் பயணத்தைத் தொடங்கியவர். முட்டியில் ஏற்பட்ட காயம், அறுவை சிகிச்சை, ஓராண்டு ஓய்வு எனப் பல தடைகளைத் தாண்டி, திருமணத்துக்குப் பிறகும் கணவர் கார்த்திக்கின் பக்கபலத்துடன் தன் கனவைத் தொடர்கிறார். பத்தாண்டுக் கடின உழைப்பும் விடாமுயற்சியும் கைகூட, 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4.15 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தடைகளைத் தகர்த்து வரலாற்றை மாற்றி அமைத்த இந்தச் சாதனை மங்கைக்கு, `சிங்கப் பெண்' விருது வழங்கி கைகுலுக்குகிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here