• Title sponsor


கல்வித் தாரகைகள் - கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

  • நீட் தேவையா, தேவையில்லையா என்ற சர்ச்சைகள் ஒருபுறம்... `எங்கள் பிள்ளைகள் எந்தத் தேர்வுக்கும் சளைத்தவர்களில்லை' என்று தங்கள் அயராத உழைப்பால் நிரூபித்து முன் மாதிரியாக்கி இருக்கிறார்கள் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். கடந்த ஏழு ஆண்டுகளில் நாற்பது மாணவிகளை நீட் தேர்வில் வெற்றிபெறச் செய்திருக்கும் இவர்கள், தனியார் பயிற்சி மையத்தில் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கான கட்டணத்தையும் தங்களுக்குள் பகிர்ந்து செலுத்தி அந்த மாணவர் களுக்கு வழிகாட்டியுள்ளனர். தற்போது தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் 40 மாணவர்கள், இந்த ஆசிரியர் களின் அரும்பணிக்குச் சாட்சி. நன்கொடைகள் பெற்று ஐந்து நவீன ஆய்வகங்கள், 3,000 புத்தகங்களுடன் நூலகம் அமைத்திருக்கிறார்கள். விளையாட்டிலும் மாணவிகளை ஊக்கப்படுத்தி, எதிர்காலத்தைக் கட்டமைக்கும் இந்த ஆசிரியர் களின் பெருமையைப் போற்றி, `கல்வித் தாரகைகள்' விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here