மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவையும் இப்போது தன்வசம் வைத்திருக்கும் இளம் நட்சத்திரம் அனிஷ்மா அனில்குமார். `பூவன்' படத்தில் சினியாக தன் பயணத்தைத் தொடங்கியவர், `ஐ ஆம் காதலன்' ஷில்பா, `மரணமாஸ்' ஜெஸ்ஸி என மலையாள 2கே கிட்ஸின் ஃபேவரைட் ஆனார். `சிறை'யில் கலையரசியாக இவர் சிந்திய யதார்த்த கண்ணீருக்கு ஆறுதலாகப் பூக்களைத் தூவி வரவேற்று அரவணைத்துக்கொண்டது தமிழ் சினிமா. `யூத்' படத்தில் இளசுகளின் இதயங்களை வென்றவர், `மொத ராத்திரி' படத்தில் நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். ஏற்கும் கதாபாத்திரங்களுக்கு இயல்பான நடிப்பால் உயிரூட்டுவது, உணர்வுகளை முகபாவனைகளில் கடத்துவது என இரு மொழிகளிலும் குறுகிய காலத்தில் தடம் பதித்த அனிஷ்மா, பாதுகாக்கப்பட வேண்டிய இளம் கலைஞர்.
அசாத்தியத் திறமையுடன் தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிய அனிஷ்மாவுக்கு, `யூத் ஸ்டார்' விருது வழங்கிச் சிறப்பிக்கிறது அவள் விகடன்.