• Title sponsor


வைரல் ஸ்டார்ஸ் - தி ஷீ யூனிட்

  • பள்ளியில் தொடங்கிய ஏழு இளம் பெண்களின் நட்பு, நடனத்தின் வழியே சாதனைப் பயணமாக மாறியிருக்கிறது. கோவையைச் சேர்ந்த சுவேதா, சஞ்சனா, அகல்யா, நிஷிதா, ஹரிஸ்மிதா, சுப, அஸ்விதா ஆகியோர், கல்லூரிப் படிப்புக்குப் பிறகும் தங்கள் நட்பைப் பிரியாமல் இருக்க நடனத்தைத் துணையாகக் கொண்டார்கள். குடும்பங்களின் எதிர்ப்புகளைக் கடந்து, நண்பர் களின் வீட்டு மாடியில் தொடங்கிய இவர்களின் நடனப் பயிற்சி, இன்று தனி நடன ஸ்டூடியோ வரை வளர்ந்திருக்கிறது. 2020-ல் மொபைல் கேமராவில் தொடங்கிய இவர்களின் நடன வீடியோக்கள், சமூக வலைதளங்களில் மில்லியன் வியூஸை வாரிக் குவித்தன. `கறுத்த மச்சான்’ பாடலுக்கு இவர்கள் ஆடிய வீடியோ 16 மில்லியன் வியூஸை தட்டித் தூக்கியது. அதன்பின் தொடர்ந்து சமூக வலை தளங்களில் கவனம் ஈர்த்ததுடன், நடிகர் சிவகார்த்திகேயனின் சிறப்புப் பாராட்டையும் பெற்றிருக்கிறார்கள். விஜய் ஆண்டனி, யுவன் ஷங்கர் ராஜா, `ஹிப் ஹாப்' ஆதி ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளிலும் நடனமாடியிருக்கிறார்கள். நடனத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைச் சேமித்து, சொந்தமாகப் பாடல் உருவாக்கி ஆல்ப மாகவும் வெளியிட்டிருக்கிறார்கள். இவர்கள் இன்றைய ஏஐ யுகத்தின் புது டிரெண்டிங் முகங்கள். இணையத்தையும் நம் இதயத்தையும் ஆக்கிர மிக்கும் தி ஷீ யூனிட் குழுவினருக்கு, `வைரல் ஸ்டார்ஸ்' விருது வழங்கி கௌரவிக்கிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here