• Title sponsor


லிட்டில் சாம்பியன் - தாரகை ஆராதனா

  • கடலுக்கடியில் குவிந்துகிடக்கும் குப்பைகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் கடல்வாழ் உயிரினங்களைக் காக்கக் களமிறங்கியிருக்கிறார் பன்னிரண்டு வயதுச் சிறுமி தாரகை ஆராதனா. ஐந்து வயதில் தொடங்கிய நீச்சல் பயிற்சி, மீன்பிடி வலையில் சிக்கித் துடித்த கடல் பசுவையும் குட்டியையும் கண்டபின், கடல் காக்கும் களப் பணியாக உருமாறியது. கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கடலுக்கடியில் மூழ்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டு, இதுவரை 7,000 கிலோவுக்கும் அதிகமான குப்பை களை அகற்றிச் சாதனை படைத்திருக்கிறார் இந்த நீர்க்காதலி. நீண்டதூர நீச்சல், கடலுக்கடியில் நடனம், கிரிக்கெட் எனத் தன் ஒவ்வொரு முயற்சி யையும் கடல் பாதுகாப்பு விழிப்புணர்வோடு இணைத்துவிடுகிறார். இன்று இவரின் நற்பணியால் நாற்பதுக்கும் மேற்பட்டோர் கடலின் மீது காதல் கொண்டு இவருடன் கைகோத்திருக்கின்றனர். கடல்வாழ் உயிரினங்களைக் காக்கும் பொறுப்பைத் தன் இளம் தோள்களில் சுமக்கும் இந்தச் சிறுமிக்கு, `லிட்டில் சாம்பியன்' விருது வழங்கி வாழ்த்துகிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here