• Title sponsor


சாகச மங்கை - செளந்தரி

  • எட்டு வயதில் சைக்கிள் ஓட்டத் தொடங்கிய ஆர்வம், பன்னிரண்டு வயதில் பைக் மீதான தீராத காதலாக மாறியது. அப்படியே இன்று சர்வதேச ரேஸ் பைக்குகளுக்குத் தகுதிச்சான்றிதழ் வழங்கும் இந்தியாவின் முதல் பெண் ஆய்வாளராக உயர்ந்து நிற்கிறார் சௌந்தரி. சளைக்காமல் ஆண்களுக்கான ரேஸிலும் சீறிப்பாய்ந்து அடுத்தடுத்த சுற்றுகளுக்குத் தகுதி பெற்றார். உயிரை உலுக்கிய விபத்தையும் தாண்டி மீண்டும் டிராக்குக்குத் திரும்பினார். குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ரேஸில் களமிறங்கி மூன்றாமிடமும் பிடித்திருக்கிறார் இந்த அசாத்திய ரேஸர். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக 150 சிசி பைக்கில் 42 நாள்களில் 16,210 கி.மீ பயணித்து 28 மாநிலங் களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறார். தங்க நாற்கர சாலையை 118 மணி நேரத்தில் கடந்ததோடு, இரண்டாயிரத்துக்கும் மேற் பட்டோருக்குப் பயிற்சி அளித்துள்ள வேகமும் விவேகமும் கொண்ட சௌந்தரிக்கு, `சாகச மங்கை' விருது வழங்கிக் கொண்டாடுகிறது அவள் விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here