2020 - 21 பெருந்தொற்று காலத்தின்போது, ஓ.டி.டி, சமூக இடைவெளியுடன் திரையரங்க அனுமதி எனக் கிடைத்த நம்பிக்கை வெளிச்சத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு முன்னேறியது தமிழ் சினிமா. புது முயற்சிகள், புதிய வியாபார யுக்திகள் என அத்தனை சிரமங்களுக்கு மத்தியிலும் ஏதொவொரு திரையில் சினிமா ஒளிர்ந்தது, கலைஞர்கள் மக்களை மகிழ்வித்தனர். இரண்டு வருடங்களுக்கும் சேர்த்து குறைவான படைப்புகளே வெளியான நிலையில், அந்தச் சவாலான காலகட்டத்தில் சாதித்த கலைஞர்களுக்கு மகுடம் சூட்டுவதில் பெருமை கொள்கிறது ஆனந்த விகடன்.