Ananda Vikatan Cinema Awards 2019 CINEMA
AWARDS 2019

சிறந்த நடிகை - 2019

  • Winner

    டாப்ஸி பன்னு - கேம் ஓவர்

    டாப்ஸிக்கு இது வேறு ஆடுகளம். தமிழில் கிட்டத்தட்ட ரீ என்ட்ரி. இந்தி, தெலுங்கு என நடிப்பில் ராட்சஸி முகம் காட்டிவிட்டு, தமிழ்க்கரையில் மையம் கொண்டு கேம் ஓவரில் டாப்ஸி காட்டியது அசுரப் பாய்ச்சல். கண்ணாடிக்குடுவைக்குள் சிக்குண்ட பறவையாய்ப் பதற்றத்துடன், தன் ஒவ்வொரு அடியையும் பதைபதைப்புடன் எடுத்து வைக்கவேண்டிய கதாபாத்திரம். மன அழுத்தத்துடன் இருக்கும் கதாபாத்திரத்தில் நாம் டாப்ஸியை உள்வாங்கிக்கொள்ளும் முன்னரே, கால்கள் உடைக்கப்பட்டு வீல் சேரில் அடுத்த பரிணாமத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார். ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த வன்முறைக்கு அந்தப் பெண்ணையே காரணமாய்ச் சொல்லி பலியாக்கும் சூழலில் ஒரு கதாபாத்திரம். விளையாட்டின் படிநிலைகள், இருட்டு தரும் பயம், விடுதலையின் மீதான தணியாத வேட்கை என டாப்ஸி வெற்றியை நோக்கி நகரும்போதும் அவ்வப்போது தோற்கும் போதும், நம்பிக்கை வார்த்தைகள் அளித்தார்கள் படம் பார்க்கும் ரசிகர்கள். இறுதிக்காட்சியில் சாளர வெளிச்சத்தில் எல்லாம் கடந்து மந்தகாசம் வீசும் டாப்ஸியின் நடிப்பு அசாத்தியமானது. கேம் ஸ்டார்ட்ஸ் டாப்ஸி!
  • டாப்ஸிக்கு இது வேறு ஆடுகளம். தமிழில் கிட்டத்தட்ட ரீ என்ட்ரி. இந்தி, தெலுங்கு என நடிப்பில் ராட்சஸி முகம் காட்டிவிட்டு, தமிழ்க்கரையில் மையம் கொண்டு கேம் ஓவரில் டாப்ஸி காட்டியது அசுரப் பாய்ச்சல். கண்ணாடிக்குடுவைக்குள் சிக்குண்ட பறவையாய்ப் பதற்றத்துடன், தன் ஒவ்வொரு அடியையும் பதைபதைப்புடன் எடுத்து வைக்கவேண்டிய கதாபாத்திரம். மன அழுத்தத்துடன் இருக்கும் கதாபாத்திரத்தில் நாம் டாப்ஸியை உள்வாங்கிக்கொள்ளும் முன்னரே, கால்கள் உடைக்கப்பட்டு வீல் சேரில் அடுத்த பரிணாமத்துக்குள் நம்மை இழுத்துச் செல்கிறார். ஒரு பெண்ணின் வாழ்வில் நடந்த வன்முறைக்கு அந்தப் பெண்ணையே காரணமாய்ச் சொல்லி பலியாக்கும் சூழலில் ஒரு கதாபாத்திரம். விளையாட்டின் படிநிலைகள், இருட்டு தரும் பயம், விடுதலையின் மீதான தணியாத வேட்கை என டாப்ஸி வெற்றியை நோக்கி நகரும்போதும் அவ்வப்போது தோற்கும் போதும், நம்பிக்கை வார்த்தைகள் அளித்தார்கள் படம் பார்க்கும் ரசிகர்கள். இறுதிக்காட்சியில் சாளர வெளிச்சத்தில் எல்லாம் கடந்து மந்தகாசம் வீசும் டாப்ஸியின் நடிப்பு அசாத்தியமானது. கேம் ஸ்டார்ட்ஸ் டாப்ஸி!

Other Nominations

See all Winners