• Title Sponsor

டாப் 10 மனிதர்கள்

  • ரோமுலஸ் விட்டேக்கர்- ஜானகி லெனின் - விலங்குகளின் நேசர்கள்

சென்னையில் பாம்புப் பண்ணை, முதலைப் பண்ணை என எங்கு நாம் சென்றாலும், அந்தக் காற்றில் நிச்சயம் ரோமுலஸ் விட்டேக்கரின் பெயர் இருக்கும். ஆசியாவிலேயே முதல்முறையாக முதலைகளின் இனப்பெருக்கச் செயல்முறைகளையும் அவற்றின் மனநிலையையும் புரிந்துகொண்டவர் ரோமுலஸ்தான். பாம்புகளோடு இருளர் மக்களுக்கு இருக்கும் உறவையே, பாம்புகள் பாதுகாப்புக்கும் பாம்புக்கடி பிரச்னைக்கான தீர்வுகளில் ஒன்றாகவும் மாற்றியவர். அவருடைய அந்த முயற்சி இருளர் மக்களுக்கு முக்கியமான தொரு தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தது. படத்தொகுப்பாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய ரோமுலஸின் மனைவி ஜானகி லெனின், தற்போது பல சர்வதேச ஊடகங்களுக்கு மிருகங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதிவருகிறார். மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் பிரச்னையின் அடிப்படையைப் புரிந்துகொள்வதில் மிகவும் பிரயத்தனப்பட்டார் ஜானகி. யானை, புலி போன்ற பேருயிர்களையும் கடந்து, இந்தச் சுழலுக்குள் சிக்கும் மற்ற உயிரினங்கள்மீதும் கவனம் செலுத்துகிறார். செங்கல்பட்டுக்கு அருகே தங்களின் நிலத்தை முழுவதுமாகக் காடாக மாற்ற, இருவருக்கும் 20 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. அதன்மூலம் பல விலங்குகளை, மீண்டும் அந்தக் காடுகளுக்குள் வர வைத்திருக்கும் இவர்கள் இருவரும் சூழலியலுக்கான நம்பிக்கை வெளிச்சம்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here