• Title sponsor

டாப் 10 மனிதர்கள்

  • உன்னத மனிதர் - ராஜேந்திரன்

விளம்பரமே பிரதானமாகிப்போன உலகத்தில் இந்த 84 வயது பெரியவர் நிச்சயமாக ஆச்சர்ய மனிதர். 320 ரூபாய் முதலோடு விருதுநகரிலிருந்து மதுரைக்கு வந்த இந்த மாமனிதரின் அப்பளக் கம்பெனி இன்று உலகம் முழுமைக்கும் வடகம், வற்றலை ஏற்றுமதி செய்கிறது. தனக்கு வாழ்வளித்த மதுரைக்கு சத்தமில்லாமல் அள்ளி வழங்குகிறார். ஏழை, எளிய மக்களின் ஒரே நம்பிக்கையான மாநகராட்சிப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு இவர் கொடுத்த கொடை ரூ. 2 கோடியைத் தாண்டும். இந்த மகத்தான மனிதர் செய்த உதவிகள் ஓர் அதிகாரி மூலம் வெளியே வர, தமிழக முதல்வரே அவரைச் சந்தித்து நெகிழ்ந்து பாராட்டினார். கொரோனா தொடங்கி எத்துயர் வந்தாலும் தவிக்கும் மக்களைப் பற்றிக்கொள்கின்றன இவரின் கொடைக்கரங்கள். தனக்கென்று வாழாத இந்தப் பெருந்தகையாளரை கரங்கூப்பி வணங்குகிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here