• Title sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • அட்டாக்கிங் வீரன் - கார்த்தி செல்வம்

பாஸ்கர், வி.ஜே.பீட்டர், ரங்கநாதன் பிரான்சிஸ், கோவிந்தன் என இந்திய ஹாக்கி அணியில் தமிழர்கள் வரிசை ஆதிக்கம் செலுத்தியது ஒரு காலம். பிறகு, ஹாக்கி என்பதே தமிழர்களுக்கு அந்நியமாகிவிட, கடந்த 13 ஆண்டுகளில் இந்திய அணியில் ஒரு தமிழர்கூட இல்லையென்பது துயரம். அந்தக் குறையைத் தீர்க்க அரியலூரிலிருந்து புறப்பட்டு வந்திருக்கிற `அட்டாக்கிங் வீரன்’ நம் கார்த்தி செல்வம். அறிமுகமான ஆசியக்கோப்பைப் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி கோலோடு தொடங்கியது கார்த்தியின் வெற்றிப்பயணம். சென்னையில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் தொடரில் ‘`கார்த்தி... கார்த்தி...’’ என்ற ஆரவாரக் குரலில் நீந்தி மைதானத்திற்குள் நுழைந்தார் கார்த்தி. கண்கள் குளமாக அதைப் பார்த்து நெகிழ்ந்தது குடும்பம். வாட்ச்மேன் அப்பாவும், வீட்டு வேலை செய்யும் அம்மாவும் கொடுத்த நம்பிக்கையில் வறுமையை ஜெயித்து உலக ஹாக்கிக் களங்களைக் கலக்கப்போகும் இந்தத் தங்கமகனின் வெற்றி, இளம் தலைமுறைக்கு நன்னம்பிக்கை. பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்காகத் தயாராகிவரும் கார்த்தியை உளம் குளிரப் பாராட்டி மகிழ்கிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here