• Title sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • சண்டைக்கார சகோதரர்கள் - அன்பறிவ்

‘ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்’ என்பது சினிமா மொழி என்றால், ‘ஆக்‌ஷன் ஆக்‌ஷன் ஆக்‌ஷன்’ என்பது அன்பறிவின் புதுமொழி. தங்களின் அசாத்திய சண்டைப் பயிற்சிகளில் இந்திய சினிமாவைக் கலக்கிக்கொண்டிருக்கிற உடன்பிறப்புகள். ரஜினி, கமல் தொடங்கி சல்மான்கான், பிரபாஸ் என பிறமொழி நாயகர்கள் வரை அன்பறிவ் கால்ஷீட் வாங்கிவிட்டுத்தான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். சண்டைக்காட்சிக்கான டெம்ப்ளேட்களை உடைத்து, புது இலக்கணம் வகுத்து, யதார்த்தத்தைக் கூட்டி பார்வையைத் திரையிலே லயிக்கச் செய்கிறார்கள் இந்த அன்பும் அறிவும். ‘கே.ஜி.எஃப்'புக்குக் கிடைத்த உலகளாவிய வரவேற்பில் இவர்களுக்குப் பெரிய பங்குண்டு. சீனியர் மணிரத்னத்தில் இருந்து ஜூனியர் லோகேஷ் வரைக்கும் அன்பறிவுடன் கைகோக்க நினைப்பதுதான் இவர்களின் திறமைக்கான ஆகப்பெரிய வெற்றி. இவ்வாண்டு சாதித்தது போக, வரும் ஆண்டும் இவர்களுக்கானதே! பத்துக்கும் மேற்பட்ட மெகா பட்ஜெட் படங்கள் இவர்கள் கைவண்ணத்துக்காகக் காத்திருக்கின்றன. இரட்டைவால் குருவிகளாகத் திரைவானில் தனித்துவமாகச் சிறகு விரிக்கும் இந்தச் சகோதரர்களைக் கைகுலுக்கி மகிழ்ச்சி கொள்கிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here