• Title sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • வைரல் ஸ்டார் - மோனிஷா பிளசி

பளிச்சென மனதில் ஒட்டிக்கொள்ளும் பாந்தமான முகம், கிடைத்த தருணத்தில் திறமையைக் காட்டிவிடும் துடிப்பென கவனம் ஈர்த்த இந்த ‘மாவீரன்’ ராஜிக்குத் திரையுலகில் விரிந்திருக்கிறது பெரும்பாதை. பள்ளிக்காலத்தில் கிடைத்த ஒரு நாள் வி.ஜே வாய்ப்பு மீடியா கனவை விதைக்க, ‘கலக்கப்போவது யாரு’ தந்தது நல்வெளிச்சம். எவரையும் இமிடேட் செய்யாத நடிப்பும் உறுத்தாத உடல்மொழியும் அழகிய உச்சரிப்பும் ‘வித்தியாசமா இருக்கே’ என கவனிக்க வைத்தது. பலமுறை ஆடிஷனோடு முடிந்துபோன ‘குக்கு வித் கோமாளி’ கனவு நனவானபோது, மோனிஷாவுக்கான வானம் மேலும் விரிந்தது. நிகழ்ச்சியின் இயல்பில் பொருந்திப்போன மோனிஷாவை மக்கள் கொண்டாடத் தொடங்க, அடுத்தடுத்து சினிமா, வெப்சீரிஸ் எனச் சிறகடிக்கிறார். இந்த உயரம் எளிதில் வாய்க்கவில்லை. எளிய குடும்பத்துக்கேயான வறுமையும் சிரமங்களும் அவரது கனவுக்குத் தடையாக இல்லை. தொலைக்காட்சி தொடங்கி சோஷியல் மீடியா வரை வசியப்படுத்திய இந்த வைரல் ஸ்டாருக்கு நம்பிக்கை விருதளித்துப் பெருமிதப்படுகிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here