• Title Sponsor

டாப் 10 மனிதர்கள்

  • காளி வெங்கட்

திரையுலகம் மதிப்பும் மரியாதையுமாகக் கொண்டாடுகிற அபூர்வமான குணச்சித்திர நடிகர் காளி வெங்கட். சாதாரண பாத்திரங்களைக்கூட தன் உடல்மொழியால் உயிரூட்டி அதகளம் செய்வதில் காளி, பெரிய கில்லி. இவரை மனதில் வைத்தே இப்போது பல திரைக்கதைகள் உருவாகி உயிர் பெறுகின்றன. புதுப்புது உடல்மொழி, விதவித வட்டார வழக்கு என கதாபாத்திரத்துக்கும் காட்சிக்கும் நியாயம் சேர்ப்பது இவரின் ஸ்பெஷல்! பெரிய ஹீரோ படங்களோ, சிறு பட்ஜெட் சினிமாக்களோ, இன்று எல்லோருக்கும் தேவைப்படுகிறார் இந்த சின்சியர் சினிமாக்காரர். ‘மெட்ராஸ் மேட்னி’ கண்ணனாக இவர் காட்டியது மிடில் கிளாஸ் அப்பாக்களின் அச்சு அசலான நிஜ முகம். காமெடி, குழப்பம், எமோஷன் என எல்லா உணர்வுகளையும் ‘ஹவுஸ்மேட்ஸ்’ ரமேஷாகக் கலந்துகட்டி அடித்தார். கம்பெனி கம்பெனியாக ஏறியிறங்கி வாய்ப்பு கேட்டவரிடம், இன்று கால்ஷீட் கேட்டுக் காத்திருக்கின்றன அதே சினிமா கம்பெனிகள். சமகால தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத யதார்த்த திரைக்கலைஞன் காளி வெங்கட்டை 2025-ம் ஆண்டின் நம்பிக்கை மனிதர்களில் ஒருவராகத் தேர்வுசெய்து கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here