• Title Sponsor

டாப் 10 இளைஞர்கள்

  • சாண்டி

நடனத்திற்கென அறியப்பட்ட சாண்டி, நடிப்பிலும் அடைந்திருப்பது எல்லோரும் கவனிக்கத்தக்க உயரம். வடசென்னைத் தெருக்களில் நடமாடித் திரிந்த கால்கள், இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரையும் ஆடவைக்கும் இடம் தொட்டது, தீராத தேடலுக்கும் அசராத உழைப்புக்கும் கிடைத்த அசலான வெற்றி. ரியாலிட்டி ஷோக்களில் தன் மின்னல் வேக நடனத்தால் தனிக்கவனம் பெற்ற சாண்டியின் பயணம், சினிமாவில் கால் வைத்ததும் டாப் கியரில் எகிறியது. நடன மொழியில் இவர் காட்டிய வித்தியாசம், இயக்குநர்களின் பார்வையை இவர் பக்கம் திருப்பியது. ‘லியோ' படத்தில், ஈவிரக்கமற்ற கொடூர வில்லனாக சாண்டியைக் கண்டபோது ‘அடடே' என்று ஆச்சர்யப்பட்டார்கள் ரசிகர்கள். அடுத்தகட்ட அசாத்திய எபிசோடாக அமைந்தது ‘லோகா சாப்டர் ஒன்'. ‘லஞ்ச போலீஸ் நாச்சியப்ப'னாக இவர் கண்களை உருட்டி மிரட்டியது, மொழிகள் கடந்தும் ரசிக்க வைத்தது. சற்றே பெண்மை கலந்த குரல், முற்றிலும் புதிய உடல்மொழி என தெலுங்கு ‘கிஷ்கிந்தாபுரி'யில் மாற்றுத்திறனாளியாக இவர் எடுத்த அவதாரம், அதற்கடுத்த ஆச்சர்யம். கன்னட சினிமாவையும் விட்டுவைக்கவில்லை இந்த `பேன் இந்தியா’ அசுரன். திறமையும் தேடலும் கொண்ட நவீன இளைஞர்களுக்கு ரோல் மாடலாக தன்னை செதுக்கிக்கொண்ட சாண்டிக்கு நம்பிக்கை விருதளித்துக் கொண்டாடுகிறது ஆனந்த விகடன்.

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here