• Title Sponsor

டாப் 10 மனிதர்கள்

  • ஸ்மிதா சதாசிவன் - பெருமிதப் பெண்மணி

கராத்தே, கல்ச்சுரல்ஸ் என கலகலப்பாக இருந்த ஸ்மிதாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போட வந்தது ‘மல்ட்டிபிள் ஸ்க்ளீரோசிஸ்’ நரம்பியல் நோய். அதனால் மருந்தும் மருத்துவமனையுமாக முடங்கிய ஸ்மிதாவுக்கு நம்பிக்கைக் கரம் கொடுத்தது மல்ட்டிபிள் ஸ்க்ளீரோசிஸ் சொசைட்டி. அவர்கள் ஊட்டிய நம்பிக்கையில் உடல் தரும் துயரத்தைச் சுமந்துகொண்டே ஆங்கில இலக்கியம் முடித்து மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பில் பணியிலும் இணைந்தார். அன்று தொடங்கி மாற்றுத்திறனாளிகளின் உரிமை, வாய்ப்புக்களுக்காக ஒலிக்கும் முதல் குரலானார். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் குறை களைந்து புதிய திருத்தங்கள் கொண்டுவந்ததில் பெரும்பங்கு இவருக்கே. தேர்தல் கமிஷனின் accessibility consultant, மாநில மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை வாரியம், உலக சுகாதார உச்சி மாநாட்டு சபை என எங்கும் பங்களிக்கும் இந்த 44 வயது நம்பிக்கை மங்கை, தமிழகத்தின் பெருமிதப் பெண்மணி!

`The Imperfect Show 2021 ரிவைண்ட் குவிஸ் போட்டியில்'பங்கு கொண்டதற்கு நன்றி. மீண்டும் கலந்துகொள்ள Click Here