மரபார்ந்த பழக்கவழக்கங்களுக்குப் பின்னிருக்கும் மூடநம்பிக்கைகளைக் களைந்து அறிவியலைச் சொல்லித்தரும் சீரான பேச்சுக் கலைஞன். ஆழமாக வகுப்பறைப் பாடம் நடத்தாமல் நண்பன் மாதிரி சினேகத்துடன் பேசுவது மிஸ்டர் ஜி.கே-வின் தனித்தன்மை. கனவுகள் சொல்லும் ரகசியங்கள், பில்லி சூனியம், பேய், பிசாசு என நம்மை அச்சுறுத்தும் அனைத்து மூடநம்பிக்கைகளின் உள்ளிருக்கும் உண்மைகளை எடுத்துரைக்கும் ஜி.கே-வின் பேச்சு புது ரகம். சிக்கலான அறிவியலையும் எளிய தமிழில் பேசும் இந்த மென்பொறியாளருக்கு ஏராளம் இளம் தமிழ் ரசிகர்கள். வியூஸ், லைக்ஸ் நாடி ஓடாமல் அக்கறையோடு அறிவியல் பேசும் தன்மையே ஜி.கே-வை மனதுக்கு நெருக்கமாக்குகிறது. இவரது வீடியோக்களை வகுப்பறையில் போட்டு பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துமளவுக்கு உண்மையும் எளிமையும் கைகூடியிருக்கிறது. வெல்கம்... நீங்கள் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு பாஸ்!