Ananda Vikatan Cinema Awards 2019 CINEMA
AWARDS 2019
 • Title Sponsor

  Title sponsor

Ananda Vikatan Cinema Awards 2019


33 விருதுகள்... 150+ பரிந்துரைகள்... 2019-ம் ஆண்டின் தமிழ் சினிமாவை அலசி ஆராய்ந்து அளிக்கப்படும் மாபெரும் கௌரவம்... திறமைக்கு மரியாதை அளித்து மேடையேற்றும் விகடனின் பாரம்பர்யம்... ஆனந்த விகடன் சினிமா விருதுகள்! இந்த வருடத்துக்கான வெற்றியாளர்கள் இதோ...

ஒவ்வொரு பிரிவிலும் விகடன் வெற்றியாளரைக் கணித்து, அசத்தல் ஸ்லோகன் ஒன்றையும் பூர்த்தி செய்த வாசகர்கள், விருது நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெறுகிறார்கள். அவர்களின் விவரங்களை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

எஸ்.எஸ்.வாசன் விருது - 2019

 • பாரதிராஜா

  1977. பெரும்பான்மையான இந்தியா, கிராமங்களில் வாழ்ந்தது.

  See Details

சிறந்த படம் - 2019

 • Winner

  பேரன்பு

  மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட பதின்பருவத்துச் சிறுமியின் உடல்-உள்ள மாற்றங்களையும், அதை எதிர்கொள்ள முடியாமல் போராடும் தகப்பனின் துயர்மிகு அன்றாடத்தையும் காட்சிப்படுத்தியது பேரன்பு. சராசரி மனிதர்களின் கவனத்துக்கு வராத இத்தகைய சிறப்புக்குழந்தைகளின் வாழ்க்கையைப் பதிவுசெய்த வகையில் பாராட்டத்தக்க பணியைச் செய்தது.

  See Details

சிறந்த இயக்குநர் - 2019

 • Winner

  வெற்றி மாறன், அசுரன்

  செருப்பணிந்து நடக்காதே என்றவனின் தோலை உரித்தே செருப்பாய் நட. .

  See Details

சிறந்த நடிகர் - 2019

 • Winner

  தனுஷ் - அசுரன்

  வடக்கு தொடங்கி மேற்கு வரை திசைகளைக் கடந்து திறமை காட்டும் கலைஞன் தனுஷ். இந்த முறை நடிப்பு அசுரனாய் அசத்தினார்; மயக்கினார்; அதிரவைத்தார்.

  See Details

சிறந்த நடிகை - 2019

 • Winner

  டாப்ஸி பன்னு - கேம் ஓவர்

  டாப்ஸிக்கு இது வேறு ஆடுகளம். தமிழில் கிட்டத்தட்ட ரீ என்ட்ரி.

  See Details

சிறந்த இசையமைப்பாளர் - 2019

 • Winner

  யுவன் ஷங்கர் ராஜா - பேரன்பு, சூப்பர் டீலக்ஸ்

  பேரன்பு, சூப்பர் டீலக்ஸ் என இசையின் இரு துருவங்களையும் தொட்டன யுவனின் இருகரங்கள். அவர் பியானோவின் வெண்வதிகள் வெண்பரியாய் பிடரி சிலுப்ப, கரும்வதிகள் கரும்பூனையாய்க் குறும்பு செய்தது.

  See Details

சிறந்த வில்லன் - 2019

 • Winner

  ஸ்டன் சிவா, சாம்பியன்

  வில்லன் என்பவன் கொடூரனாக இருக்க வேண்டியதில்லை. அமைதியின் சொரூபமாய் நமக்கு எல்லாமளித்து, நம்முடனேயே நம் கழுத்தை அறுக்கும் நபராக இருக்கலாம் என வெள்ளை நிறத்துக்குப் பின்னிருக்கும் அழுக்கு அரசியல்வாதிகளைக் கண்முன் கொண்டு வந்தார் ஸ்டன் சிவா.

  See Details

சிறந்த வில்லி - 2019

 • Winner

  சாய் தன்ஷிகா, இருட்டு

  கதையின் நாயகியாய், கதை நகர்த்தும் ஊன்றுகோலாய் கெத்து காட்டிய தன்ஷிகாவுக்கு இந்த முறை வில்லி வேடம். வசனங்கள் கிடையாது, பார்க்கும் பார்வையிலும் நடையிலும் பயத்தைப் பார்வையாளர்களுக்குள் விதைக்க வேண்டும்.

  See Details

சிறந்த குணச்சித்திர நடிகர் - 2019

 • Winner

  ஜார்ஜ் மரியான், கைதி

  இரவின் ரேகைகளைக் கிழித்தபடி ஓடிய கூட்டத்தின் நடுவே தனிவெளிச்சம் பெற்று நிமிர்ந்து நின்றார் ஜார்ஜ். முதல் காட்சியில் பையைத் தூக்கிக்கொண்டு சாதாரணமாய் வந்திறங்கியவரைச் சுற்றி விரிந்தது கைதியின் குற்றப்பத்திரிகை.

  See Details

சிறந்த குணச்சித்திர நடிகை - 2019

 • Winner

  ரம்யா கிருஷ்ணன், சூப்பர் டீலக்ஸ்

  சில நிமிடங்களுக்கு முன் தன்னை வசைபாடிய மகனின் துயரநிலை, இன்னொருபுறம் மருத்துவமனையிலும் பிரசங்கம் செய்யும் கணவர். உங்களுக்கு ஒரு பிரச்னைனா நான் கட்டாயம் உதவி பண்ணியிருப்பேன் என மருத்துவரிடம் மன்றாடும் அக்காட்சி ரம்யா கிருஷ்ணனின் அனுபவ நடிப்புக்கு ஓர் உதாரணம்.

  See Details

சிறந்த நகைச்சுவை நடிகர் - 2019

 • Winner

  செ.ஆனந்தராஜ், ஜாக்பாட்

  பாட்ஷா வைக் கம்பத்தில் கட்டிவைத்து உரித்து மிரட்டிய அதிரடி வில்லன், இப்போது காமெடி வில்லன் வட்டாரத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பி முழுநீள நகைச்சுவை நடிகராய் சிரிப்பில் ஆழ்த்துகிறார் ஆனந்தராஜ். அதிலும் ஜாக்பாட் படத்தில் இவர் ஆடியது காமெடி கதகளி.

  See Details

சிறந்த நகைச்சுவை நடிகை - 2019

 • Winner

  ஊர்வசி, தில்லுக்கு துட்டு- 2

  ஊர்வசியின் உதறல் உடல்மொழி தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயம். இந்த ஆண்டும் தனது டிரேடுமார்க் பாவனையில் சிரிப்புவேட்டை நடத்தினார் ஊர்வசி.

  See Details

சிறந்த அறிமுக இயக்குநர் - 2019

 • Winner

  செழியன், டுலெட்

  வணிக நிர்பந்தங்களின் வரையறை தாண்டிய சினிமா, டுலெட் . சென்னைப் பெருநகரத்தில் வாழும் ஒரு சிறுகுடும்பம்.

  See Details

சிறந்த அறிமுக நடிகர் - 2019

 • Winner

  த்ருவ் விக்ரம், ஆதித்ய வர்மா

  யாக்கையில் பரவிக்கிடந்த காதலோ ஒருநொடியில் தன்னைப் பிரிய, பிரிவினால் உண்டான நஞ்சுக்குத் தன்னையே உண்ணக் கொடுக்கும் ஆதித்ய வர்மா, தேவதாஸின் நவயுக வடிவம்! ஆண்திமிர், வயதுக்கேற்ற முதிர்ச்சி, சுட்டெரிக்கும் நினைவுகள், அதீத அலட்சியம் எனப் பரிமாணங்கள் பல கொண்ட பாத்திரத்தை, இது ரீமேக்தானே என்ற எண்ணம் தோன்றாதவாறு அச்சு அசல் சாத்தியப்படுத்திக் காட்டினார் த்ருவ். அசலின் வீச்சு பெரிது, பெரும் நடிகனின் மகன் எனும் சுமையும் பெரிது.

  See Details

சிறந்த அறிமுக நடிகை - 2019

 • Winner

  லிஜோமோள் ஜோஸ், சிவப்பு மஞ்சள் பச்சை

  பாந்தமான தோற்றத்தாலும் இயல்பான நடிப்பினாலும் இந்த ஆண்டு எல்லாரையும் திரும்பிப் பார்க்கவைத்தார் லிஜோமோள் ஜோஸ். பாசம் கொட்டிய அக்காவாக, அன்பில் நெகிழ்ந்து மருகும் மனைவியாக அறிமுகப் படத்திலேயே இரண்டு பரிமாணங்கள்.

  See Details

சிறந்த குழந்தை நட்சத்திரம் - 2019

 • Winner

  நாக விஷால், கே.டி (எ) கருப்புதுரை

  ஸ்வீக்கர கீக்கற முழுங்கிட்டயாய்யா, சாமியே காதப் பொத்திக்குச்சு என்று தன் முதல் வசனத்திலேயே பார்வையாளர்களைக் கவலை மறந்து சிரிக்க வைத்தான் சிறுவன் நாகவிஷால். மேல்வாயில் ஓட்டைப் பல்லுடன் கோலிவுட்டுக்கு அறிமுகமாகிய இந்தச் சிறுவன், அந்தப் பிடரி நரைத்த கிழவருடன் உரையாடிய ஒவ்வொரு காட்சியும் அப்ளாஸ் ரகம்.

  See Details

சிறந்த ஒளிப்பதிவு - 2019

 • Winner

  PS வினோத் | நீரவ் ஷா, சூப்பர் டீலக்ஸ்

  ஜன்னலுக்கு அப்பால் ஒளிரும் திரையில் தோன்றும் டைட்டிலிலிருந்து தொடங்கியது இந்தக் கூட்டணியின் ஒளி விளையாட்டு. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என வினோத் - நீரவ் ஷா தோற்றுவித்தது வானவில் காட்சிமொழி.

  See Details

சிறந்த படத்தொகுப்பு - 2019

 • Winner

  ரிச்சர்ட் கெவின், கேம் ஓவர்

  100 நிமிடங்கள், ஒரு சவாலான திரைக்கதை. ஒரே ஒரு வீடுதான் கதைக்களம்.

  See Details

சிறந்த கதை - 2019

 • Winner

  அதியன் ஆதிரை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு

  அதிகாரத்தின் அத்தனை வடிவங்களுக்கும் ஒற்றைக் குண்டை உவமையாக்கிக் கதை சொல்லியிருந்தார் இயக்குநர் அதியன் ஆதிரை. உலகில் ஒரு வேளைச் சோற்றுக்கு வழியில்லாமல் கோடானுகோடி மக்கள் பட்டினியில் கிடக்க, கோடிகோடியாய்ச் செலவு செய்து ஆயுதங்கள் வாங்குவது எதற்கு? எனும் அழுத்தமான அரசியல் கேள்வியை எழுப்பிய, உலகத்துக்கான தமிழ்க்குரலே கதைக்களத்தின் ஆதாரம்.

  See Details

சிறந்த திரைக்கதை - 2019

 • Winner

  தியாகராஜன் குமாரராஜா | நலன் குமாரசாமி | நீலன் K சேகர் | மிஷ்கின், சூப்பர் டீலக்ஸ்

  வெவ்வேறு திசைகளில் ஒன்றுக்கொன்று தொடாமல் மின்னல் வேகத்தில் பயணிக்கும் கதைகள்; அக்கதைகளை ஒற்றைப் புள்ளியில் இணைத்து சுவாரஸ்யத்தை இழைத்து அற்புதம். .

  See Details

சிறந்த வசனம் - 2019

 • Winner

  சபரிவாசன் சண்முகம், கே.டி (எ) கருப்புதுரை

  முதியவரிடம் இருக்கும் குழந்தைத்தனம், சிறுவனின் முதிர்ச்சி என்னும் இரு துருவங்களை இணைக்கும் வசனங்களில் மாயம் நிகழ்த்திக்காட்டினார் சபரிவாசன் சண்முகம். நமக்குப் பிடிச்சவங்க கூட இருக்கறது மட்டும் அன்பு இல்ல.

  See Details

சிறந்த வசனம் - 2019

 • Winner

  ஹலிதா ஷமீம், சில்லுக்கருப்பட்டி

  நான்கு வெவ்வேறு கதைகளின் மாந்தர்கள் பேசும் வசனங்களே அவர்களின் உறவுநிலைகளையும் உணர்வு நிலைகளையும் பார்வையாளர்களுக்குக் கடத்தின. சேரிச்சிறுவர்கள், இரண்டு இளைஞர்கள், முதிர்பருவ நண்பர்கள், பிரிவின் விளிம்பில் வாழும் தம்பதி ஆகியோரின் வாழ்க்கையை அப்படியே சித்திரித்தன ஹலிதா ஷமீமின் வசனங்கள்.

  See Details

சிறந்த கலை இயக்கம் - 2019

 • Winner

  ஜாக்கி, அசுரன்

  ஜாக்கி பிடித்த பென்சிலின் கூர்முனையிலிருந்து உருவானது தெக்கூரும், வடக்கூரும். வீடுகள், கடைகள், பள்ளி, கோயில்கள், கம்பெனிகள், நீதிமன்றம் என அத்தனையும் அவர் உருவாக்கிய உழைப்பு.

  See Details

சிறந்த ஒப்பனை - 2019

 • Winner

  நெல்லை V. சண்முகம் | K. வேல்முருகன் | பானு | நஹூஷ் N பைஸ் | அமல்தேவ் J.R, அசுரன்

  இன்றுவரை இளமை முகம் மாறாத தனுஷை, திருமண வயதாகும் இளைஞனுக்கு அப்பாவாக மாற்றுவது அசகாய சவால். சவாலை எதிர்கொண்டு சாதித்துக்காட்டியது படத்தின் ஒப்பனை அணி.

  See Details

சிறந்த சண்டைப்பயிற்சி - 2019

 • Winner

  அன்பறிவ், கைதி

  உணர்வுபூர்வமான ஆக்‌ஷன் படத்துக்கு ஸ்டன்ட் காட்சிகளின் மூலம் திரையில் குருதி தெறிக்க அதிர வைத்து சுவாரஸ்யத்தைக் கூட்ட முடியும் என கைதி யில் நிரூபித்துக்காட்டினர் இரட்டையர்களான அன்பறிவ். ஒரு காட்சிக்கும், அடுத்த காட்சிக்கும் இடையே ஆக்ரோஷத்தின் லெவல் கூடிக்கொண்டே இருந்தன.

  See Details

சிறந்த நடன இயக்கம் - 2019

 • Winner

  ஷோபி | லலிதா ஷோபி, வெறித்தனம், பிகில்

  சும்மாவே ஆடுவார் விஜய். அவரை வெறித்தனமாய் ஆடவைத்தால்.

  See Details

சிறந்த ஆடை வடிவமைப்பு - 2019

 • Winner

  உத்ரா மேனன், எனை நோக்கி பாயும் தோட்டா

  அச்சில் வார்த்த பக்கத்துவீட்டுப் பையனாக தனுஷ், ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும் அழகியாக மேகா ஆகாஷ் - மஞ்சள் ஒளியில் மினுங்கிய இவர்களோடு எனை நோக்கி பாயும் தோட்டா வில் எண்ணற்றவர்களைப் பொருந்திப் போகச் செய்தவை உணர்வுகள் மட்டுமல்ல, உடைகளும்தான்! மெல்லிசான கோடுகளும் விதவிதமான கட்டங்களும் காஸ்ட்யூம்களில் படர்ந்து ஈர்த்தன. உள்ளே ஊறும் குறுகுறுப்பைக் குறிக்க வெளிர் நிறங்கள், எழிலை எடுத்துக்காட்டும் வெள்ளை, துயரின் அடர்த்தி கூறும் கறுப்பு எனப் படத்தில் ஆடைகள் சொன்ன கதைகள் ஏராளம்.

  See Details

சிறந்த பாடலாசிரியர் - 2019

 • Winner

  யுகபாரதி, வெள்ளாட்டுக் கண்ணழகி , மெஹந்தி சர்க்கஸ், எள்ளுவய , அசுரன்

  பெருநகரத்துப் பரபரப்புகளுக்கிடையே சிக்கிக் கொண்டிருந்த காதலை மீண்டும் கிராமத்துக் குழாய் ஒலிபெருக்கிகளில் தவழவிட்டன யுகபாரதியின் பாடல் வரிகள். காட்டுமல்லிச் செட்டழகி , ரோசாக்குடம் , கோயில் ரதம் என எளிய வார்த்தைகளின் வழியே குதூகல மான உரையாடலைப் பட்டிதொட்டி யெங்கும் நிகழ்த்தினார் இந்தப் பாடல் பாரதி.

  See Details

சிறந்த பின்னணிப் பாடகர் - 2019

 • Winner

  சித் ஶ்ரீராம், மறுவார்த்தை பேசாதே , எனை நோக்கி பாயும் தோட்டா

  ஆண்டு முழுக்கவே சித் ராமின் போதைக்குரலில் கட்டுண்டு கிடந்தார்கள் தமிழர்கள். குளிருக்கு இதமாய் சுருண்டுகிடக்கும் அதிகாலைப் போர்வை நொடிகளில், மேகங்கள் விலக்கி நிலா மெதுவாய்த் தலைதூக்கும் ரம்மியமான அந்திமாலை நேரங்களில், காதலின் ஆழம் தேடும் இரவுப்பொழுதுகளில் என எங்கும் எதிலும் வியாபித்திருந்தார் அவர்.

  See Details

சிறந்த பின்னணிப் பாடகி - 2019

 • Winner

  சைந்தவி, எள்ளுவய, அசுரன்

  தனயனைப் பறிகொடுத்த தாயின் அழுகுரலாய் நம்மைக் கரைத்தது சைந்தவியின் குரல். நாசியைத் துளைக்கும் மகனின் வாசத்தையும், கண்களில் கசியும் தாயின் பாசத்தையும் நம் செவிவழி செலுத்தி இதயங்களை மேலும் கனமாக்கினார்.

  See Details

சிறந்த தயாரிப்பு - 2019

 • Winner

  கே.டி (எ) கருப்புதுரை, சரிகமா இந்தியா

  திகட்டாத மகிழ்ச்சியையும், அழியாத சோகங்களையும் கடந்து தன் வாழ்வின் முடிவுரையை எழுதிக்கொண்டிருக்கும் ஒருவருக்கு, இன்னும் நெகிழவும், மகிழவும், முடிவுரையை ஆச்சர்யக்குறியுடன் எழுதிமுடிக்கவும் பெரும் பட்டியலே இருக்கின்றன எனும் தத்துவத்தைச் சொன்னது கே. டி.

  See Details

சிறந்த படக்குழு - 2019

 • Winner

  கோமாளி, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

  16 ஆண்டுகளுக்குப் பிறகு, கோமாவில் இருந்து மீண்டெழும் இளைஞனின் கதையில் சிரிப்பும் சிந்தனையும் கொட்டிக் கொடுத்தது கோமாளி. பாக்ஸ் ஆபீஸில் பிசினஸ் கேம் ஆடி, அதிரவைத்த இந்த 90`ஸ் கிட்ஸ் படத்தைத் தயாரித்து வழங்கியதோ 60`ஸ் கிட் ஐசரி கணேஷ்.

  See Details

அதிக கவனம் ஈர்த்த படம் - 2019

 • Winner

  பிகில், ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்

  2019 ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை தொடர்ந்த ரிலீஸ் ஆரவாரத்துக்கு நடுவே எக்ஸ்ட்ரா டெசிபலில் ஒலித்த சத்தம் பிகிலுடையது. விஜய் - அட்லி, விஜய் - ரகுமான் கூட்டணியின் ஹாட்ரிக் படத்தின் அறிவிப்பு வந்த நாள் முதலே ஆன்லைன் முதல் ஆஃப்லைன் வரை எங்கும் பிகில்தான்.

  See Details

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - 2019

 • Winner

  விஸ்வாசம், சத்ய ஜோதி பிலிம்ஸ்

  கண்ணீரும் கலகலப்பும் கலந்த குடும்பக்கதை, அதில் ஒரு மாஸ்ஹீரோ. .

  See Details